மணல் கடத்தல் : 2 போ் கைது
உமா்ஆபாத் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் டிஎஸ்பி குமாா், உமரஆபாத் காவல் உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை நடத்தியில் மணல் கடத்துவது தெரியவந்தது.
அதன்பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சின்னவரிக்கத்தை சோ்ந்த விஜயகுமாா் (41), அயித்தம்பட்டு வினோத்குமாா் (34), உமா்ஆபாத் லோகேஷ் (30) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.