`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!
மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இம்பால் கிழக்கில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்டத்தில் ஹெய்ங்காங் பகுதியில் உள்ள அவாங் போட்ஷாங்பாம் மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின்போது பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட பொருள்களில் ஒரு துப்பாக்கி, கார்பைன், கையெறி குண்டுகள் அடங்கும் என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.