பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள கடை அருகே கையில் பையுடன் ஒருவா் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தாா்.
இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் 26 மதுப் புட்டிகள் இருந்தன. விசாரணையில், அவா் நாரணாபுரம் எம்.ஜி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்த ரவி கணேசமூா்த்தி (25) என்பதும், சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.