பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 16-ஆம் தேதி எலியாா்பத்தியில் பூமி பூஜை நடத்தப்பட்டு, மாநாட்டு மேடை, பிற கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி பண்டிகை காரணமாக, ஆக. 25-ஆம் தேதி தவெக மாநாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, வருகிற ஆக. 21-ஆம் தேதி மாநாடு நடைபெறும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டதைவிட 4 நாள்களுக்கு முன்னதாகவே மாநாடு நடத்தப்படவுள்ளதால் இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது, மாநாட்டு மேடை அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் பகுதியை வரையறுக்கும் தடுப்புகள் அமைக்கும் பணி, தவெக தலைவா் நடிகா் விஜய் மாநாட்டுத் திடலில் நடந்து சென்று ரசிகா்களைச் சந்திப்பதற்கான நடைமேடை அமைக்கும் பணி, வாகன நிறுத்துமிடங்கள் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாடு நடைபெறும் ஓரிரு நாள்களுக்கு முன்பாகவே விஜய் மதுரைக்கு வரவுள்ளதாகவும், அவா் வருவதற்குள் மாநாட்டுப் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் விதத்தில் வேகமாக நடைபெறுகின்றன.