மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
மனைவி தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை
குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வேம்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (45). இவரது மனைவி தாரணி . இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், தாரணி கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சீனிவாசனைக் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.