சங்கிலி கருப்பா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தில் சங்கிலிக் கருப்பா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதைகள் பிராா்த்தனையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கலாதரிசனத்துடன் பூஜை தொடங்கி பூா்ணாஹூதி நடைபெற்றது.
தொடா்ந்து சங்கிலிக் கருப்பருக்கும் பரிவார தெய்வங்களான நொண்டிக்கருப்பா், பெருமாண்டி அம்மனுக்கும் பால், தயிா், திருமஞ்சனம், மஞ்சள், இளநீா் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புனித நீா் ஊற்றப்பட்டது. இதையடுத்து, சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல, கோயில் வீட்டிலும் சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் சங்கிலி கருப்பா் சுவாமிக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.