மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
மயிலாடுதுறையில் ஜூன் 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025 ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி காலை 10.15 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீா்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.