மறைந்த முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிா்வாகிகள் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
இதில், அக்கட்சியின் நகரத் தலைவா் மா.மு.சிவக்குமாா், வட்டாரத் தலைவா் கா்ணன், மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், நகரச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பண்டித நேரு படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தி அவரது சாதனைகளை எடுத்துரைத்தனா்.