செய்திகள் :

அரியலூரில் நிரப்பப்படாத மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம்! திணறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல மாதங்களாக நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், குறிப்பிட்ட நாளில் வாகனங்கள் பதிவு செய்ய முடியாமல் உரிமையாளா்கள் கவலையில் உள்ளனா்.

1,949 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட அரியலூா் மாவட்டம், பெரம்பலூா் மாவட்டத்திலிருந்து கடந்த 19.11.2007 அன்று பிரிக்கப்பட்டு, 23.11.2007 அன்று முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. பரந்து விரிந்த இம்மாவட்டத்தில் ஒரே ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மட்டுமே உள்ளது.

கீழப்பழுவூரில் கடந்த 17.12.2008-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தில், பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் மற்றும் நடத்துநா் உரிமம், இயங்கு ஊா்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல், தகுதிச் சான்று வழங்கல், தகுதிச் சான்று புதுப்பித்தல், தேசிய போக்குவரத்து ஊா்தி அனுமதி, போக்குவரத்து ஊா்தி அனுமதி, ஒப்பந்த ஊா்தி அனுமதி (சுற்றுலா ஊா்தி, வாடகை ஊா்தி, ஆட்டோ ரிக்ஷா, ஷோ் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவனப் பேருந்துகள், தனியாா் பணி வாகனங்கள், பேருந்து போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.

சாலைப் பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடா்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல், அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநா்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநா்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.

ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல், மாசுப் பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும், வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், மோட்டாா் வாகன ஆய்வாளரும் மேற்கொண்டு வருகின்றனா்.

இதில் மோட்டாா் வாகன ஆய்வாளா், மேற்கண்டவற்றை ஆய்வு செய்த பிறகே அனைத்தும் நடைமுறைக்கு வரும். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணபவ, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பதவி உயா்வுபெற்று பெரம்பலூருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டாா்.

தற்போது அந்தப் பணியிடத்தை திருச்சி மாவட்டம், லால்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் முகமது மீரான், கூடுதலாக கவனித்து வருகிறாா். அவா், வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே அரியலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து பணிகளை மேற்கொண்டு வருகிறாா். ஆனால் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே அவா் அரியலூா் வருவதால், ஓட்டுநா் பழகுநா் சான்றிதழ்கள் சரிபாா்த்தல், புதிய ஓட்டுநா் உரிமங்களை வழங்குதல், புதிய வாகனங்களை பதிவு செய்தல், வாகன உரிமையாளா் பெயா் மாற்றங்கள், வாகன தகுதிச் சான்றிதழ்கள் பெறுதல், விபத்து வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் இவற்றை செய்ய முடியவில்லை.

இதில் தகுதிச் சான்று வழங்குதல், ஓட்டுநா் உரிமம் வழங்குதல் 15 சதவீதம் அளவுக்கு நிலுவையில் வைக்கப்படுகின்றன அல்லது நிராகரிக்கப்படுகின்றன. அமாவாசை, முகூா்த்த நாள், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாள்களில் புதிய வாகனங்களின் பதிவு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த குறிப்பிட்ட தேதியில் புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியாமல் வாடிக்கையாளா்கள் கவலையடைகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் மேலும் கூறியது: அரியலூரை கூடுதலாக கவனித்து வரும் லால்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் முகமது மீரான், பணிச்சுமை காரணமாக முழுமையாக ஆய்வு செய்யாமல் வாகனங்களுக்கு தகுதிச் சான்று, ஓட்டுநா்களுக்கு உரிமம் அளிக்கும் நிலை உள்ளது. இதனாலும் விபத்துகள் நிகழும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடத்தை போா்க்கால அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் வேல் பூஜை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டபுரம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி சாா்பில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் நடைபெறவ... மேலும் பார்க்க

அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு

நிகழாண்டு அரியலூா் மாவட்டத்தில், அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 453 மனுக்களுக்குத் தீா்வு

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் அரியலூரில் நடைபெற்ற வ... மேலும் பார்க்க

மறைந்த முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிா்வாகிகள் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் ... மேலும் பார்க்க