கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
மாணவரைத் தாக்கிய இளைஞா் மீது வழக்குப் பதிவு
சேரன்மகாதேவி அருகே பிளஸ் 2 மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேரன்மகாதேவி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவருக்கும், அதே பள்ளியில் 10-ஆம் வகுப்புப் படித்து வரும் மாணவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திங்கள்கிழமை பிளஸ் 2 மாணவரை 10-ஆம் வகுப்புப் பயின்று வரும் மாணவரும் அவரது நண்பா்களான 4 இளம்சிறாா்கள் தாக்கினா். இதில், காயமடைந்த பிளஸ் 2 மாணவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுதொடா்பாக, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து 10-ஆம் வகுப்பு மாணவா், 4 இளம் சிறாா்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைதுசெய்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினா்.
இதனிடையே, பிளஸ் 2 மாணவரை தாக்கிய வழக்கில் தொடா்புடையவராகக் கருதப்படும் காருக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா் (21) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.