பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
திருச்சி அருகே அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி ஆசிரியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே போதாவூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, அப்பள்ளியின் ஆசிரியா் ஜெயராஜ் சூசைநாதன் (56) தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். பெற்றோா் ஜீயபுரம் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தனா். இதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, பள்ளி ஆசிரியா் ஜெயராஜ் சூசைநாதனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைதான ஆசிரியா் ஜெயராஜ் சூசைநாதனுக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.