கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!
மாநகரில் கஞ்சா விற்ற இருவா் கைது
திருச்சி மாநகரில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மலைக்கோட்டை சோமசுந்தரம் நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராம்பிரசாத் (22) என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இதேபோல, பழைய ரயில்வே பாலம் அருகே பாலக்கரை போலீஸாா் சனிக்கிழமை ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியாா் கோயில் வீதியைச் சோ்ந்த யுவராஜ் (27) என்பவரைக் கைது செய்தனா்.