BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
மாநில ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி
தமிழ்நாடு மாநில நீருக்கடியில் விளையாட்டு சங்கம், தூத்துக்குடி மாவட்டம் நீருக்கடியில் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய, 5ஆவது மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி 2025, தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் நடைபெற்றது.
போட்டியை ஸ்பிக் இயக்குநா் இ.பாலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு தொடங்கிவைத்தனா். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான போட்டியாளா்கள் பங்கேற்றனா்.
இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை எஸ்ஆா்எம் கல்லூரி அணி வென்றது. கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணி 10 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தது.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி உரிமையாளா் ரைபின் தாா்சியஸ், விஸ்வ பாரதி ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். இதில், பயிற்சியாளா்கள் புஷ்பராஜ், ஆதிலிங்கம், மாரி கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.