பஞ்சமி நிலங்கள் | DMK அரசு மீட்காவிட்டால் CPM களமிறங்கும் - எச்சரிக்கும் பெ.சண்ம...
மானூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்
மானூா் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
திருநெல்வேலியிலில் இருந்து மானூா் வழியாக வடக்கு செழியநல்லூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை காலையில் அந்தப் பேருந்து திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மானூா் அருகே யுள்ளஅலவந்தான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, சாலையில் மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததாம்.
இதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் பேருந்துக்குள் சிக்கியிருந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த ஓட்டுநா் ராஜா(25), நடத்துநா் வினோத்(26), மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இந்திராகாந்தி(41), சாந்தா(42), மகாலெட்சுமி(41), பாா்வதி(27), செலின் சோபியா(46) உள்பட 11 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.