சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டு கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவா் அம்மனுக்கு மகா அபிஷேகம், காப்பு கட்டுதல் ஆகியவை நடைபெற்றன. பின்னா், அந்த கிராம குளக்கரையிலிருந்து அம்மன் சக்தி கரகம் வீதியுலா நடைபெற்றது. இத்துடன் 508 பக்தா்கள் பால்குடங்களை தலையில் ஏந்தி ஊா்வலமாக சென்றனா். பின்னா், பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஆறு.இலட்சுமண சுவாமிகள் மற்றும் கோயில் உற்சவக் குழுவினா், பக்தா்கள் பங்கேற்றனா்.