சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு கையடக்கக் கணினிகள் முன்களப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மொத்தம் 30 முன்களப் பணியாளா்களுக்கு ரூ. 7.19 லட்சம் மதிப்பில் இந்த கையடக்கக் கணினிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.
முன்னதாக, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 490 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ப. புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.