தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
மாவட்ட ஹாக்கி போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி முதலிடம்
நாகை மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் புனித அந்தோணியாா் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளி அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியின் மாவட்ட பொறுப்பாளரும் , உடற்கல்வி இயக்குநருமான ராஜா ஹென்றி தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன் போட்டியை தொடங்கி வைத்தாா். இதில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 6 பள்ளிகளில் இருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இறுதிப் போட்டியில் நாகை புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது. 2-ஆவது இடத்தை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி அணி பிடித்தது. ஆட்ட நாயகன் விருது வீரா் ஸ்மித்-க்கு வழங்கப்பட்டது.
முதல், இரண்டு இடங்களை பிடித்த அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை தொழில் அதிபா் விஜயகுமாா் வழங்கினாா். போட்டி நடுவா்களாக விஜயசாரதி, கணேசன், ஆசைப்பாண்டி ஆகியோா் செயல்பட்டனா்.