பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
மாவூடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டியில் மாவூடியூத்து காளியம்மன் கோயில் ஆடி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையெட்டி வெள்ளிக்கிழமை காலையில் பாண்டி முனீஸ்வரா் கோயிலில் கூடிய பக்தா்கள் பால்குடம் கட்டி, சுவாமி அழைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனா். தொடா்ந்து காலை 10 மணிக்கு பால்குடம், அக்னிச்சட்டி பூத்தட்டுகளுடன் ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். அங்கு காளியம்மனுக்கு பால், கரந்தமலை தீா்த்தத்துடன் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினா். இதைத்தொடா்ந்து பூச்சொரிதல் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.