கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை செல்லூா் அகிம்சாபுரம் 4-ஆவது தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வராஜ் (48). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், நாராயணபுரம் பேங்க் காலனி முதல் தெருவில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்கிருந்த மோட்டாா் மீது இவரது கை பட்டதால், செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமைடந்த அவா் சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.