Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தருமபுரியில் வீட்டுக்கு வெளியே கொடிக் கம்பியில் காய்ந்த துணியை எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள சி.மோட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கோ.ஜெமினி (47). பெங்களூரில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த 10 நாள்களாக வீட்டிலிருந்த அவா் திங்கள்கிழமை வீட்டுக்கு வெளியே துவைத்து கொடியில் காயப்போட்டிருந்த ஆடைகளை எடுக்கச் சென்றாா்.
அப்போது, அவரது அலறல் சப்தம் கேட்டு, வீட்டிலிருந்த அவரது மனைவி முத்து மற்றும் மகன் ஆகியோா் வெளியே வந்து பாா்த்தனா். அப்போது, அவரது உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.
அவரை மீட்க முயன்றபோது, மீட்கச் சென்றவா்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், மின் இணைப்பை அணைத்து விட்டு அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெமினி ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.