`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரிய...
ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்
அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த மாவேரிப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா். இந்தப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை, ஓய்வுநேரங்களில் தனது கைகள் மற்றும் கால்களை அழுத்திவிடுவதற்கு மாணவா்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்து, அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் விஜயகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் மாதம்மாள், வட்டாட்சியா் பெருமாள், வருவாய் ஆய்வாளா் சத்தியபிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவேரிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் பெற்றோரிடம் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.