மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்
முதல்வரின் தாயுமானவா் திட்டம் : செப்.13 இல் வீடுகளுக்குச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம்
திருவாரூா் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று குடிமைப் பொருள்கள் செப்.13 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன என மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கா.சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் செப்டம்பா் மாதத்துக்கு செப்.13, செப்.14 மற்றும் செப்.15 ஆகிய தேதிகளில் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
மேலும், இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் திட்டப்பயனாளிகளுக்கு, அவரவா் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.