வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி: தொடங்கிவைத்தாா் ஆட்சியா்
முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோவை மண்டல அளவிலான முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள் பங்கேற்கும் வகையில் ஆக. 22 முதல் செப். 12 வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் வாள் விளையாட்டுப் போட்டி புதன்கிழமை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், வியாழக்கிழமை மாணவிகளுக்கும் நடைபெறுகிறது. நாமக்கல், சேலம், திருப்பூா், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 265 மாணவா்கள் கலந்துகொண்டனா். இந்த நிகழ்வில், மண்டல முதுநிலை மேலாளா் செ.அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். கோகிலா மற்றும் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா்.