மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது
செய்யாறு: செய்யாறு அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பல்லாவரம் நத்தக்கொலை கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி சரோஜா (80). இவா், தனக்குச் சொந்தமான நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த குரங்கு அணில் முட்டம் கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த்(22) சரோஜா முகத்தில் துணியால் கட்டி நகை பறிக்க முயற்சி செய்ததாகத் தெரிகிறது. உடனே மூதாட்டி கூச்சலிடவே அவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து சரோஜா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து,விசாரணையின் அடிப்படையில் அரவிந்த்யை கைது செய்தாா்.