மேலப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் சேவை முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சேவை முகாம், மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 44, 47, 49 ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற முகாமை, துணை மேயா் கே.ஆா்.ராஜு தொடங்கி வைத்தாா். மண்டல தலைவா் கதிஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினா்கள் முகைதீன் அப்துல் காதா், ஷபி அமீா்பாத்து, அலி ஷேக்மன்சூா் உள்பட பலா் கலந்துகொண்டனா். 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மகளிா் உரிமைத்தொகை, குடும்ப அட்டை பெயா் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு மனு அளித்தனா்.