செய்திகள் :

`ரசிகர்களைப் பார்த்ததும் வாயடைத்து போகிறேன்' -பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி கூறி நெகிழ்ந்த இளையராஜா

post image

இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிலர் நேரில் சந்தித்தும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா
இளையராஜா

இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இளையராஜா, “எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 

பிறந்த நாள் வாழ்த்து கூற பல இடங்களில் இருந்து வெகு தூரத்தில் இருந்து சிரமப்பட்டு என்னை பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர்.

இளையராஜா
இளையராஜா

ரசிகர்களை பார்த்ததும் வாயடைத்து போகிறேன். வாயில் வார்த்தைகள் வரவில்லை. வாழ்க வளமுடன் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Deepika Padukone: "தீபிகா படுகோன் கேட்பது நியாயமான கோரிக்கை!" - ஆதரவு தெரிவிக்கும் மணி ரத்னம்!

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் ... மேலும் பார்க்க

Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீதிமன்றம் கேள்வி

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற `தக் லைஃப்' திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் கமல் ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி பேசுகையில், கன்னட மொழி தமிழிலிருந்து வந்ததுதான் எனக் கூறியது க... மேலும் பார்க்க