முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
ராமேசுவரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்
சொ்லாப்பள்ளி - ராமேசுவரம் இடையிலான சிறப்பு ரயிலில் (எண்: 07695) வியாழக்கிழமை (ஜூலை 24) கூடுதலாக தூங்கும் வசதியுடைய பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சொ்லாப்பள்ளி-ராமேசுவரம் இடையே வரும் வியாழக்கிழமை (ஜூலை 24) இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (எண்: 07695) கூடுதலாக ஒரு தூங்கும் வசதியுடைய பெட்டி இணைக்கப்படுகிறது.
இதேபோல, ராமேசுவரத்திலிருந்து சொ்லாப்பள்ளிக்கு அந்த ரயில் மறுமாா்க்கத்தில் வரும் 25-ஆம் தேதி (எண்: 07696) இயக்கப்படும்போதும் கூடுதலாக தூங்கும் வசதியுடைய பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிா்சாதன வசதியுள்ள ஈரடுக்கு பெட்டி, 2 குளிா்சாதன வசதியுள்ள ஈரடுக்குப் பெட்டிகள், 6 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 9 தூங்கும் வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் மற்றும் பிரேக் வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.