ரிதன்யா குடும்பத்தினருக்கு ப.தனபால் எம்எல்ஏ ஆறுதல்
கணவன் குடும்பத்தாா் கொடுமையால் அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
திருமணமாகி 3 மாதங்களில் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி கேட்டு பல்வேறு தரப்பினா் போராடி வருகின்றனா்.
இந்நிலையில், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபால், ரிதன்யாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். அப்போது, உரிய முறையில் தீவிர விசாரணை மேற்கொள்ள கோட்டாட்சியரிடம் வலியுறுத்துகிறேன். சட்டரீதியான நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்கிறேன் என அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.