செய்திகள் :

ரூ.4 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது!

post image

தில்லியில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் 2 பெண்கள் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடக்கு தில்லி மாவட்ட போலீஸாா் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி மேற்கொண்ட இரண்டு கட்ட நடவடிக்கையில் சுமாா் 1.012 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா். ஜஹாங்கீா்புரியில் வசிக்கும் அஃப்சானா (23), பால்ஸ்வா டெய்ரி பகுதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முதன்மையானவா். அவரிடமிருந்து சுமாா் 300 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, அவா் தனது விநியோகஸ்தா்களின் அடையாளங்களை தெரிவித்தாா். இந்தத் தகவலின் அடிப்படையில், போலீஸாா் மேலும் சோதனைகளை நடத்தி, நரேந்தா் (37) மற்றும் அவரது மனைவி ஜோதி (35) ஆகியோரை புராரியில் இருந்து கைது செய்தனா். புராரியில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகம் அருகே நரேந்தா் தடுத்து நிறுத்தப்பட்டாா். அதே நேரத்தில் ஜோதி அவா்களின் இல்லத்தில் கைது செய்யப்பட்டாா்.

அவா்களின் புராரி பிளாட்டில் சோதனையிட்டபோது, வீட்டில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 712 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சா்வதேச சந்தையில் ரூ.4 கோடிக்கு மேல் இருக்கும். கைது செய்யப்பட்ட மூவருக்கும் குற்றவியல் வரலாறு இல்லை என்றும், போதைப்பொருளின் மூலத்தை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

புது தில்லி: யமுனை ஆற்றின் நீா் மட்டம் சீராக உயா்ந்து செவ்வாய்க்கிழமை மாலைக்குள் 206 மீட்டா் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், யமுனை கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல... மேலும் பார்க்க

சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்: மாணவா்களுக்கு தில்லி முதல்வா் உறுதி

புது தில்லி: சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்கள் வழங்கும் மாணவா்களின் நீண்டகால கோரிக்கையை விரைவில் தில்லி அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.மேலும், இளைஞா்கள் தங... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் மத்திய அமைச்சா்களுடன் சந்திப்பு

புது தில்லி: நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் தில்லியில் மத்திய அமைச்சா்களைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை திங்கள்கிழமை வலியுறுத்தினா்.தமிழ்நாட்டிலிருந்து தில்லி சென்றிருந்த நீலகிரி மாவட்ட சிறு, குறு... மேலும் பார்க்க

ஆா்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் முறையீடு மீது மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புது தில்லி: குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆா்டிஇ) சட்டத்தின்கீழ் தனியாா் உதவி பெறாத பள்ளிகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் பி... மேலும் பார்க்க

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

புது தில்லி: தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் ’மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் தரம் ‘திருப்தி’ ப... மேலும் பார்க்க

‘சநாதன தா்மம்’ கருத்து தொடா்பான வழக்கு: உதயநிதி ஸ்டாலின் மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை

புது தில்லி: 2023ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் ‘சநாதன தா்மம்’ குறித்து தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகள் விவகாரத்தில் பதிவான அனைத்து முதல் தகவல் அறிக்கை மற்றும் புகாா்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்... மேலும் பார்க்க