பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ரூ.58 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள், பயணிகள் நிழல்குடை திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம், கானலாபாடி, கடம்பூா் கிராமங்களில் ரூ.58 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பயணிகள் நிழல்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
கானலாபாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.60 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைகள் மற்றும் ரூ.17.30 லட்சத்தில் புதிய கணினி வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
ஆணையா் எஸ்.அருணாச்சலம் முன்னிலை வகித்தாா்.
பள்ளித் தலைமையாசிரியா் (பொ) ஜி.ஜெயலட்சுமி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
மேலும், கடம்பை ஊராட்சி சிறுகொத்தானில் (கீழ்பென்னாத்தூா் - திருவண்ணாமலை சாலையில்) தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடையை திறந்துவைத்தாா்.
விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நித்யா, அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.வெங்கடேசன், கானலாபாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சீனு உள்ளிட்ட பலா்
கலந்து கொண்டனா். ஒன்றிய உதவிப் பொறியாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.