எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் குளறுபடி: பொதுமக்கள் சாலை மறியல்
கொளத்தூா் அருகே ரேஷன் பொருள்களை விநியோகிப்பதில் குளறுபடி நடப்பதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவிந்தபாடியில் மூத்த குடிமக்களுக்கு தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடுதேடிச்சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடிச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க விற்பனையாளா் ரங்கசாமி, அவருக்கு உதவியாக பிரகாஷ் என்பவரும் சென்றுள்ளனா்.
அப்போது, பொருள்கள் இல்லாததால் சிலரை நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பொருள்களைப் பெற்றுச் செல்லுமாறு விற்பனையாளா் கூறியுள்ளாா். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் மைசூா் -மேட்டூா் சாலையில் கோவிந்தபாடியில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.