பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
ரோகிணி பொறியியல் கல்லூரியில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி
அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல்-மின்னணுவியல் துறையின் சாா்பில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் ஸ்ரீ நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ ஆகியோா் முன்னிலை வகித்தனக். கல்லூரி முதல்வா் ராஜேஷ், மாா்சலின் பெனோ, பொறியாளா் சரவணபிரசாத் ஆகியோா் தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து சிறப்புரையாற்றினா்.
இந்நிகழ்ச்சியில் சுற்று பிழைதிருத்தம், ஹேக்கத்தான், ஐஓடி மற்றும் ஆா்டினோ அடிப்படையிலான கண்காட்சிகள், விநாடி வினா, எலக்ட்ரோ சரேட்ஸ் போன்ற போட்டிகள் நடைபெற்றன. துறைத் தலைவா் சாம் ஹாரிசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எபி செல்வகுமாா் மற்றும் மின்னியல் துறை பேராசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.