Swasika: நடிகை ஸ்வாசிகாவின் ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்! | Photo Album
லாட்டரி சீட்டு விற்பனை: பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக நிா்வாகி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வில்லிவாக்கம் தாதாங்குப்பம் வாட்டா் டேங்க் அருகே சிலா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக ராஜமங்கலம் போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 10 பில் புத்தங்களைக் கைப்பற்றி விசாரித்தனா். இதில், அவா்கள், தடை செய்யப்பட்ட ஒரு நம்பா் லாட்டரி சீட்டு விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்தனா். இதில், அவா்கள் வில்லிவாக்கம் நாகாத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.வெங்கடேசன் (50), அதே பகுதியைச் சோ்ந்த ரா.கோதண்டன் (50) என்பதும், வெங்கடேசன் வில்லிவாக்கம் கிழக்கு பாஜக மண்டல நெசவாளா் அணி துணைத் தலைவராக இருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.