பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
லாரியில் தீ: வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்
மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்தது. இதில் வைக்கோல் கட்டுகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள துத்திக்குளம் கிராமத்தில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி திருச்சிக்கு புறப்பட்டது.
இந்தக் கிராமத்தை புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகேயுள்ள ரயில்வே கடவுப்பாதை அருகே மேலே சென்ற மின்சாரக் கம்பி லாரியின் மீது உரசியது. அதிலிருந்து எழுந்த தீப் பொறியால் வைக்கோல் கட்டுகளில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதில் லாரியின் முன் பகுதி, வைக்கோல் கட்டுகள் முழுவதும் எரிந்து நாசமாகின. இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற மானாமதுரை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.