பஞ்சமி நிலங்கள் | DMK அரசு மீட்காவிட்டால் CPM களமிறங்கும் - எச்சரிக்கும் பெ.சண்ம...
லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி தோல்வி!
லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணியை சியாட்டல் சௌன்டர்ஸ் அணி வீழ்த்தியது.
மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 0-3 என மோசமாக தோல்வியுற்றது.
அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் சியாட்டல் சவுண்டர்ஸ் அணி 3-0 என அபார வெற்றி பெற்றது.
போட்டியில் 26ஆவது நிமிஷத்தில் சியாட்டல் அணியின் ரொசாரியோ கோல் அடித்தார்.
அடுத்து இரண்டாம் பாதியில் சியாட்டல் அணியினர் 84-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 89-ஆவது நிமிஷத்தில் மற்றும் ஒரு கோல் அடித்து 3-0 என அசத்தினர்.

இன்டர் மியாமி அணி 3 கோல்கள் அடிக்கும் வாய்ப்பு வந்தும் அதை இலக்கை நோக்கி அடிக்காமல் தவறவிட்டனர். 2022-இல் கோப்பையை வென்ற இண்டர் மியாமி இந்தமுறை அதை தவறவிட்டது.