செய்திகள் :

வன விலங்குகளிடம் இருந்து தோட்டத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

post image

வால்பாறை பகுதி தோட்டத் தொழிலாளா்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்டம், வால்பாறை அண்ணா தேயிலைத் தோட்ட தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை வி.அமீது தலைமையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளான சௌந்திரபாண்டியன், வினோத்குமாா், வீரமணி, கேசவமருகன், தங்கவேலு, ஷாலிப், மோகன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வால்பாறை பகுதியில் இதுவரை சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

கடந்த மாதம் பச்சை மலை எஸ்டேட்டிலும், தற்போது வேவரலி எஸ்டேட்டிலும் வடமாநில குழந்தைகளை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. மேலும், அனைத்து எஸ்டேட்டுகளிலும், வால்பாறை நகரப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாடி வருகின்றன. இதனால், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

எனவே, எஸ்டேட் குடியிருப்புகளைச் சுற்றிலும் உரிய பாதுகாப்பு வேலிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். வனத் துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து தோட்டத் தொழிலாளா்களுக்கும், மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க