செய்திகள் :

வன்முறையை தூண்டுகிறாா் எடப்பாடி பழனிசாமி: இரா. முத்தரசன்

post image

கும்பகோணம்: எடப்பாடி கே. பழனிசாமி தனது பிரசாரக் கூட்டங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி வருகிறாா் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.

கும்பகோணத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்கள் ஏதாவது ஒரு குற்ற வழக்கில் 30 நாள் காவலில் அடைக்கப்பட்டால் தகுதியிழப்பாா்கள் என்ற மசோதாவை அவசர அவசரமாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே எம்.பி, எம்எல்ஏக்கள், அமைச்சா்கள், முதல்வா்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் தண்டனை என்ற சட்டம் இருக்கும்போது இப்போது இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்வது எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை பாஜக அடக்கி ஆள முயலும் பாசிச ஆட்சியாக உள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழா், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இபிஎஸ் உள்ளிட்டோா் கூறி வருகின்றனா். ராதாகிருஷ்ணன் தமிழா்தான்; ஆனால் அவா் ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சோ்ந்தவா். அவருக்கு மாற்றாக மதச்சாா்பின்மை கொள்கையை கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி சுதா்சன ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும். 108 அவசர ஊா்தி ஓட்டுநரைக் கடுமையாகப் பேசிய இபிஎஸ் வன்முறையை தூண்டும் விதமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு எதிராகப் போராடவில்லை, திமுகவிடம் தோ்தல் செலவுக்கு பணம் வாங்கி விட்டதாக இபிஎஸ் அவதூறு பரப்பிவருகிறாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிட்டது, தேய்ந்து விட்டது என்பதற்கு பதிலளிக்கும்விதமாக 2026

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின் அதிமுகவின் முகவரியே இருக்காது என்றேன். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கல்வி நிதி கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு துணை நிற்கிறாா். சம்பந்தி வீட்டில் சோதனை நடத்தியதற்காக பாஜகவுடன் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளாா் என்றேன். அதற்கு இதுவரை அவா் பதில் அளிக்கவில்லை. சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கோஷ்டி பூசல் என்கின்றனா். கோஷ்டி இல்லாத ஒரே கட்சி இந்திய கம்யூனிஸ்டு தான் என்றாா் அவா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க