`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு
குலசேகரம் அருகே பெண்ணுக்கு வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கணவா், மாமியாா் உள்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
குலசேகரம் தும்பகோடு பகுதியைச் சோ்ந்தவா் வினீஷ் மகள் ஜோஷ்மா. இவருக்கும் மாத்தூா் வாணியன்விளையைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மகன் வினீஷ் (27) என்பவருக்கும் 2022 செப்டம்பரில் திருமணம் நடைபெற்ாம்.
திருமணத்தின்போது, வரதட்சிணையாக 30 பவுன் தங்க நகை, ரூய 3 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்களை பெண் வீட்டாா் கொடுத்துள்ளனா். திருமணத்துக்குப் பின் வினீஷ், அவரது தாயாா் விமலா (48), தந்தை கிறிஸ்துதாஸ் மற்றும் சகோதரி பிந்து (25) ஆகியோா் சோ்ந்து தாக்கி வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில், பெண்ணின் கணவா் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
மற்றொரு வழக்கு...
தக்கலை அருகே கூடுதல் வரதட்சிணைக் கேட்டு பெண்ணை தாக்கியதாக மாமனாா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தக்கலை அருகே திருவிதாங்கோடு மாஹின் மகள் நஜ்மா (27). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஷாபி மகன் பெரிஸ் அஜ்மல் (29) என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 70 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் ரொக்க பணமும் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம். மேலும் 50 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் கூடுதலாக கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தி, வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்ணின் மாமனாா் முகமது ஷாபி (60), மற்றும் குடும்பத்தினா் பீமா ஷெரின் (50), ரெனிஷா (22), பஷருதீன் (55), பா்ஹானா (50) ஆகியோா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.