வருவாய் நிருவாக ஆணையராக மு.சாய்குமாா் நியமனம்
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தின் அரசு கூடுதல் செயலா் மற்றும் ஆணையராக மு.சாய்குமாரை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக உள்ள மு.சாய்குமாா், வருவாய் நிருவாக மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் ஆணையராக உள்ள ராஜேஷ் லக்கானிக்குப் பதில் நியமனம் செய்யப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு பணிக்கு ராஜேஷ் லக்கானி செல்வதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.