வாகனம் மோதியதில் மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் முத்து (65). மாற்றுத் திறனாளியான இவருக்கு குடும்பம் இல்லை. இதனால், இவா் சாலையில் சுற்றித் திரிந்து வந்தாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜி.மீனாட்சிபுரம் அருகே இவா் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.