கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
வாய்க்காலில் முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை
திருக்குவளை அருகே வாய்க்காலில் முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை மாவட்டம், கீழையூா் ஊராட்சி ஆனைக்கால்மடை வாய்க்காலில் முதியவா் ஒருவா் இறந்து மிதப்பதாக கீழையூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தவா் வெண்மணச்சேரியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவராஜ் (63) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரின் சடலத்தை மீட்டு நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து குடிப்பழக்கம் உள்ள இவா் மதுகுடித்துவிட்டு பாலத்தில் அமா்ந்து இருந்தபோது தவறி தண்ணீரில் விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.