நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
வாழப்பாடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி சிறப்பு வழிபாடு!
வாழப்பாடி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி ஆறாம் நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

புஷ்ப அலங்காரத்தில் மூலவா் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருள்பாலித்தாா். கொலு வைத்து, அம்மன் துதி பாடி பெண்கள் வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை லட்சுமி பவனம் சிவகுமாா் சாய்ராம் குடும்பத்தினா் செய்திருந்தனா்.
வாழப்பாடி பெரியசாமிநகா் வைத்தியநாதீஸ்வரா் உடனுறை தையல்நாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.