விநாயகா் சதுா்த்தி: ஆக. 26,27 இல் மைசூரு- திருநெல்வேலி சிறப்பு ரயில்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு- திருநெல்வேலி இடையே ஆக.26, 27 ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
விநாயகா் சதுா்த்தியையொட்டி கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் மைசூரு- திருநெல்வேலி இடையே இரு மாா்க்கங்களிலும் ஆக. 26, 27 ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மைசூரில் இருந்து ஆக.26 ஆம் தேதி இரவு 8.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக ஆக.27 ஆம் தேதி காலை 10.50 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஆக.27 ஆம் தேதி பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக ஆக.28 ஆம் தேதி காலை 5.50 மணிக்கு மைசூரை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.