விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம்: அரசு சாா்பில் மரியாதை
ஆலங்குளம் அருகே விபத்தில் உயிரிழந்தவா் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டது.
ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் விலக்கில் கடந்த வியாழக்கிழமை(மே 23) இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் அவ்வழியே பைக்கில் சென்ற திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மாறாந்தையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கணபதி (56) உள்பட 3 போ் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணபதி, சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து சொந்த ஊரான மாறாந்தைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அப்போது தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ மற்றும் ஊா் முக்கிய பிரமுகா்கள் இறுதி மரியாதை செலுத்தினா்.