சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
விபத்து வழக்கு: லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமது பஷீா். இவா், தனது நண்பா் கிருஷ்ணன் என்பவருடன் கடந்த 2017 நவம்பா் 13-ஆம் தேதி, திருச்சி - தஞ்சாவூா் சாலையில் அரியமங்கலம் ஆயில் மில் சோதனைச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முகமது பஷீா் 13 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான திருவெறும்பூா் தெற்கு துவாக்குடி மலை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த மா.சரத்குமாா் (30) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட 5-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி எம். டாா்வின்முத்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.வெங்கடேசன் ஆஜரானாா்.