குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
விற்பனைக்காக புகையிலைப் பொருள் வைத்திருந்த இளைஞா் கைது
தச்சநல்லூா் பகுதியில் விற்பனை செய்வதற்காக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் உலகம்மன் கோயில் பகுதியில் தச்சநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த அருண் காா்த்திக் (26) என்பவரை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு தச்சநல்லூா் மங்களா குடியிருப்பைச் சோ்ந்த பொன்னையா என்பவா் புகையிலைப் பொருள்கள் விநியோகம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து பொன்னையாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.