ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்
திருவாரூா்: அரசு அறிவித்த விலையில், பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரசு அறிவித்துள்ளபடி நீண்ட இழுவைத் திறன் உள்ள பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 12,165, நடுத்தர இழை பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 7,710 என்ற விலைகளில் கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க இந்திய பருத்திக் கழக அலுவலா்களையும் ஏலத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
அரசு வழிகாட்டுதலின்படி ஏலத்தை கண்காணிக்க இரு விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்; குடிநீா், தாா்பாய்கள், தங்குமிடம் ஆகியவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும், மறுவாரம் ஏலம் விடுவதற்கு முன் விவசாயிகளுக்கு விற்பனைத் தொகையை அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.ஆா். ஜோசப், மாவட்டத் தலைவா் கே. முருகையன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா். சதாசிவம், டி. தியாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.