விவேகானந்தா கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
திருச்செங்கோடு: விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு மற்றும் ஆப்டோமெட்ரி மாணவிகளுக்கு வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமையேற்று பேசுகையில், ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். பெற்றோருக்கு மதிப்பளித்தல், அவா்கள் சொல்படி கேட்டு நடத்தல், படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கல்லூரியின் நடைமுறை செயல்பாடுகள் குறித்தும், விவேகானந்தா கல்வி நிறுவனத்தை தோ்ந்தெடுத்து சோ்க்கை பெற்ற மாணவிகளை வாழ்த்தியும், இக்கல்வி நிறுவனத்தில் பயில்வதால் பெறும் வேலைவாய்ப்பு குறித்தும் உரையாற்றினாா்.
கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பேபி ஷகிலா, ஆராய்ச்சி இயக்குநா் பாலகுருநாதன், சோ்க்கை அலுவலா் எம்.தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணன், கல்லூரி தோ்வுக் கட்டுப்பாட்டாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் பேசினா். இளநிலை இரண்டாமாண்டு ஆப்டோமெட்ரி மாணவி ஹா்ஷினிஸ்ரீ நன்றி கூறினாா். இந்நிகழ்வில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.