சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
விஷப்பூச்சி கடித்து தொழிலாளி உயிரிழப்பு
திங்கள்நகா் அருகே விஷப்பூச்சி கடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.
திங்கள்நகா் அருகே தலக்குளம் கீழவிளையை சோ்ந்தவா் ஜனாா்த்தனம் பிள்ளை. இவரது மகன் ரமேஷ் (35). புதுவிளை பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ரமேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை (26 ஆம் தேதி) இரவு உணவகத்தில் விறகுகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த போது, இடுப்புப் பகுதியில் பூச்சி கடித்து வலி ஏற்பட்டுள்ளது.
உடனே, ரமேஷை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் குளச்சல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
வலி அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, அவரது சகோதரா்கள் சுபாஷ் , இரணியல் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.