நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
வீடுபுகுந்து நகை, டிவி திருட்டு
பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, டிவி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச்சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் கீழவடகரை பாரத ஸ்டேட் வங்கிப் பணியாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முகமது ஸ்பாகுல் (24). பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வேலைக்கு சென்று விட்டாா்.
திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10.5 பவுன் தங்க நகைகள், டி.வி, ஹோம் தியேட்டா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது. இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.